×

7 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 1 தட்டச்சர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் முத்துசாமி!

சென்னை: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் 04.10.2023 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 7 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 1 தட்டச்சர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் 04.10.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 07 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 01 தட்டச்சர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் செல்வி. அபூர்வா, இ.ஆ.ப., நகர் ஊரமைப்பு இயக்குநர் பாகணேசன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post 7 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 1 தட்டச்சர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் முத்துசாமி! appeared first on Dinakaran.

Tags : MINISTER ,MUTHASAMI ,Housing and Urban Development ,Sue ,MUTHUSAMI ,TAMIL NADU ,Mutusami ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...