×

கிச்சன் டிப்ஸ்


* கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்யும்போது ஒரு கப் பாலை அதில் விட்டால் மணமாக இருக்கும்.
* பால் காய்ச்சுவதற்கு முன்பு காய்ச்சப் போகும் பாத்திரத்தில் சிறிது தண்ணீர்விட்டு, சூடு வந்ததும் பால் சேர்த்தால் பாத்திரம் அடி பிடிக்காமல் இருக்கும்.
* கீரை மசியல் செய்யும்போது சிறிது சாதம் வடித்த கஞ்சியைவிட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.
* மோர்க்குழம்பு புளித்துவிட்டால், ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவைக் கலந்து அடுப்பில் வைத்துச் சூடாக்கி, குழம்பில் கலக்கவும், புளிப்புச்சுவை தெரியாது.
* தர்பூசணிப் பழங்களை துண்டுகளாக்கி ஃப்ரீஸரில் வைத்துவிட்டால், நீர்ச்சத்து உறைந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போலவே இருக்கும்.
* தோசைமாவு, இட்லி மாவு புளித்து விட்டால் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கலக்கினால் சரியாகிவிடும்.
* சாம்பார் பருப்ப வேக வைக்கும்போது, வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்து குக்கரில் வேக வைத்தால் சாம்பார் வாசனையாக இருக்கும்.
* எந்த விதமான சூப் செய்தாலும், அதில் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துவிட்டால் சூப் திக்காகவும், டேஸ்ட்டியாகவும் இருக்கும்.
* சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது முதலில் ஒரு தேக்கரண்டி கடலை மாவை எண்ணெயில் வறுத்துவிட்டு பிறகு, கிழங்கைச் சேர்த்து வறுத்தால் ரோஸ்ட் மொறு மொறுவென வரும்.
* சாதம் வடித்த கஞ்சியில் கோதுமை மாவைப் பிசைந்து பூரி சுடலாம். கஞ்சி இல்லையென்றால், ஒரு தேக்கரண்டி அரிசி மாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டால் கஞ்சி கிடைத்துவிடும். இதில் மாவைப் பிசைந்து பூரி செய்தால் நன்கு உப்பி வரும்.- இரா. அமிர்தவர்ஷினி.
* கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு தூள் உப்பு கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
* கடலை எண்ணெய் கெடாமல் இருக்க, அதில் சிறிது புளியை உருட்டிப் போட்டு வைக்க வேண்டும்.
* நெய் எவ்வளவு நாட்களானாலும் ஃபிரஷ்ஷாக இருக்க, அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.
* கூடையில் உருளைக்கிழங்குடன் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வைத்தால் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, உளுந்துடன் கொஞ்சம் பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறு மொறுப்பாக இருக்கும்.
* பஜ்ஜிக்கு மாவு அரைக்கும்போது ஒரு வெங்காயம், மூன்று பூண்டுப் பல், சிறிது சோம்பு ஆகியவற்றையும் நைஸாக அரைத்து மாவில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
* வெந்தயத்தை ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து மோருடன் கலக்கவும். அந்த மோரில் மிளகாயை ஊற வைத்தால் மோர்மிளகாய் வாசனையாகவும், காரம் குறைவாகவும் இருக்கும். மோர் மிளகாயுடன் பாகற்காயையும் வட்டமாக நறுக்கி ஊறவைத்தால் பொரித்துச் சாப்பிடும்போது சுவை கூடுதலாக இருக்கும்.– எம். நிர்மலா.
* பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது சிறிது எலுமிச்சை அல்லது தக்காளி சாறு பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* ஃபிரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்ட்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளியாகும் வாயுவால் கேரட் கசந்துவிடும்.
* கிச்சனில் புகை அதிகமாகி விட்டால், அறையில் ஈரத்துணியை தொங்கவிட்டால் புகை காணாமல் போகும்.
* கிச்சன் மேடையில் எண்ணெய் பிசுபிசுப்பாக இருந்தால், சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து தேய்த்து கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.- யாழினிபர்வதம்.

 

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி.,...