×

தவாகவினர் சாலை மறியல்

சேலம், அக்.5: சேலம் சித்தர் கோயில் மெயின் ரோடு, திருவாகக்கவுண்டனூர் ஆகிய இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அனுமதி இல்லாமல் கட்சி கொடி கம்பத்தை நேற்றுமுன்தினம் இரவு நட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை கொடி கம்பங்களை அங்கிருந்து அகற்றினர். இதனை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அக்கட்சியினர் சூரமங்கலம்- ஜங்ஷன் சாலையில் சூரமங்கலம் காவல்நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 42 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post தவாகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu Life Rights Party ,Salem Siddhar Koil Main Road ,Thiruvakakoundanur ,Thavakavinar ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்