×

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் மனு

மல்லசமுத்திரம், அக்.5: மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. சாதாரண நிலை, இடைநிலை, தர ஊதிய தேர்வு நிலை ஆசிரியர்களுக்கு ₹750 தனி ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும். மறுக்கப்பட்டு உள்ள ₹5000 சிறப்பு படியை இடைநிலை, தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு நிலை தலைமை ஆசிரியருக்கு ₹5400 தர ஊதியத்தை தொடர்ந்து வழங்கிடும் வகையில், தவறான தணிக்கை தடையினை கைவிட வேண்டும். இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன் செய்யப்பட்டு உரிய பயனடைந்துள்ள தலைமை ஆசிரியருக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள கடும் பாதிப்புகள் களையப்படும் வகையில், தவறான தணிக்கை தடை திரும்பப்பெறப்பட வேண்டும். 1990-91ம் கல்வி ஆண்டு ₹800 தொகுப்பூதிய இளநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன நாள்முதல் காலம் முறை ஊதியம் அனுமதிக்கப் பட்டு நிலுவை ஊதியம் பெற்று வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார கல்வி அதிகாரி சக்திவேலிடம் அளித்தனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் மனு appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Tamil Nadu Primary School Teachers' Association ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்