×
Saravana Stores

கன்னியாகுமரியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நிறைவு

கன்னியாகுமரி,அக்.5 : துளிர் அறம் செய் மையம் சார்பில், காயல்பட்டினத்தில் தொடங்கிய குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் நிறைவடைந்தது. இப்பயணத்தில் குழந்தை கடத்தல், குழந்தை பாலியல் தொந்தரவு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இப்பயணத்துக்கு துளிர் அறம் செய் மையம் நிறுவனர் வழக்குரைஞர் அஹமத் தலைமை வகித்தார். இதில், குழந்தைகள் பள்ளிகள் குழு ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான், வழக்குரைஞர் பாலசந்திரன், முனைவர் ராஜ், ஆனந்த கூத்தான், சிதம்பரம் ஆகியோர் இடம் பெற்றனர். இதன் நிறைவு நிகழ்வில் பேசிய துளிர் அறம் செய் மையம் நிறுவனர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது. மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளை கடத்தும் கும்பலின் நடமாட்டம் உள்ளது. இதனை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் தனியாக ஒரு கண்காணிப்புக் குழுவை நியமிக்க வேண்டும். மேலும், பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் குழந்தைகளை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .

The post கன்னியாகுமரியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kayalpattinam ,Thulur Aram Sey Center ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பீம்கள் பொருத்தும் பணி தொடக்கம்