×

உடையார்பாளையம் அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் அதிரடி கைது

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன்(29). இவர் தனது பெற்றோரிடம் உள்ள சொத்தை தனது பெயருக்கு எழுதி வாங்க உடையார்பாளையம் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று விசாரணை செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து தமிழரசன் அவரது தாய் மல்லிகாவிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மல்லிகாவுக்கு ஆதரவாக வந்த அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சிநாதன், சரவணன் ஆகியோர் சேர்ந்து தமிழரசன் அவரது மனைவி ரேணுகாவை திட்டி தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த 2 பேரும் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., திருவேங்கடம் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

The post உடையார்பாளையம் அருகே தம்பதியை தாக்கிய 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Tamilarasan ,Wenamankondan East Street ,Ariyalur district ,
× RELATED டெங்கு காய்ச்சல் தடுப்பு...