×

தாய்ப்பால் குடித்த பச்சிளங்குழந்தை மூச்சுத்திணறி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் திலீப் அந்தோணி ராஜ் (29). இவரது மனைவி மரியபெர்வின் பிரின்சியா (26). இவர்களுக்கு 44 நாட்களுக்கு முன் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை பிறந்த அன்றே உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. நேற்று முன்தினம் பசியால் அழுத குழந்தைக்கு மரியபெர்வின் பிரின்சியா பாலூட்டினார். திடீரென குழந்தையின் மூக்கு வழியாக பால் வழிந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பால் குடித்தபோது, புரையேறி மூச்சுத்திணறி குழந்தை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

The post தாய்ப்பால் குடித்த பச்சிளங்குழந்தை மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dilip Anthony Raj ,Mettupatti, MGR ,Mariaberwin Princia ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை