×

கோவை குண்டுவெடிப்பு சம்பவம்; குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

கோவை: கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடர் குண்டு0வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பல காயமடைந்தனர். இந்த நிலையில், இந்த சமபவத்தில் கைதான அல் உம்மா அமைப்பைச்சேர்ந்த பாட்ஸா மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த குற்றவாளிகள் 25 வருடங்களாக சிறையில் ஜாமீன் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித், உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த சமபவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். இந்த சமபாவத்தால் கோயம்புத்தூர் நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. 200 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்தன. இப்படிப்பட்ட கொடுமையான சம்பவம் என்பதால் இதற்கு ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கவுல், இந்த வழக்கில் நாங்கள் நிச்சயமாக பிணை வழங்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஜாமீன் வழங்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், வரும் பிப்ரவரி மாதம் இது தொடர்பான வழக்குகள் நடைபெறும். அப்போது இதுகுறித்து பேசலாம் என தெரிவித்துள்ளார்.

The post கோவை குண்டுவெடிப்பு சம்பவம்; குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. appeared first on Dinakaran.

Tags : Goa Bombing Incident ,Supreme Court ,Goa ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...