×

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குட்கா போதைப்பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிலை சேர்ந்த உணவு பொருட்கள் மீதான தடையை 2013 மே 23ல் தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. உணவகங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவின் தரம் குறித்த புகார்களை TN Food Safety Consumer App வாயிலாகவும், 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகாரளிக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார். தரமற்ற உணவுகள் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் 9,093 வழக்குகள் தொடரப்பட்டு ரூ.8 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், குற்றவியல் நீதிமன்றத்தில் 2,063 வழக்குகள் தொடரப்பட்டு ரூ.3.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

The post தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Minister ,Ma. Supermanian ,Chennai ,Tamil Nadu ,Ma. Supramanian ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...