×

பொன்னேரி தாசில்தார் தலைமையில் சாலையில் கால்நடைகள் திரிவதை தடுக்க ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: பொன்னேரி சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க, நேற்று மாலை தாசில்தார் மதிவாணன் தலைமையில் அரசு அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட நெடுஞ்சாலை, கிராம சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க, நேற்று மாலை பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர் பேரூராட்சி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ,ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கால்நடை மருத்துவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தாசில்தார் மதிவாணன் தலைமை தாங்கினார்.

துணை தாசில்தார் சுந்தர் முன்னிலை வகித்தார். முதன்மை அலுலவர் சுப்பிரமணி வரவேற்றார். இக்கூட்டத்தில், மீஞ்சூர்-பொன்னேரி நெடுஞ்சாலை மற்றும் காட்டூர், பழவேற்காடு செல்லும் கிராமப்புற சாலைகளில் எந்நேரமும் கால்நடைகள் சுற்றி திரிவதால், அவ்வழியே சென்று வரும் வாகனங்களின் விபத்துகளை தடுக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை உரிமையாளர்களிடம் சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடக்கூடாது. அதை பாதுகாப்பாக கட்டி பராமரிக்க வேண்டும் என முதலில் பொது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதை மீறி நடக்கும் உரிமையாளர்களின் கால்நடைகளைப் பறிமுதல் செய்து, மெதூர் மற்றும் திருவள்ளவாயல் பகுதியில் உள்ள பவுண்டில் கால்நடைகளை அடைத்து வைத்து, நாளொன்றுக்கு ₹500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி நடக்கும் மீறும் கால்நடை உரிமையாளர்கள்மீது காவல் நிலையத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post பொன்னேரி தாசில்தார் தலைமையில் சாலையில் கால்நடைகள் திரிவதை தடுக்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tahsildar ,Tahsildar Mathivanan ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...