×

மூணாறில் சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்

 

மூணாறு, அக். 4: மூணாறு அருகே கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு உட்பட்ட குண்டளை மற்றும் செண்டுவாரை எஸ்டேட் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டளை- செண்டுவாரை சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை தார் செய்யப்படாமல் உள்ளதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும்,சிறிய மழை பெய்தாலே சாலையில் போக்குவரத்து பெரும் சிரமமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமுறை கம்பெனி நிர்வாகத்திடமும், மூன்றடுக்கு பஞ்சாயத்து உறுப்பினர்களிடமும்,தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இடுக்கி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தும், இந்த சாலையை சரி செய்ய யாரும் முன் வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் நேற்று மூணாறு-டாப் ஸ்டேஷன் சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள ஓட்டுனர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

The post மூணாறில் சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Kannan Devan Company ,Kundalaya ,Sentuwarai ,Dinakaran ,
× RELATED உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு