×

கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தர்மபுரி: தர்மபுரி அருசூக மோதூர் போலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன்(35). கூலி தொழிலாளியான இவர், நடுப்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் கிணற்றில் விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ஏற்கனவே முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியப்பனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

The post கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Muniyappan ,Dharmapuri Arusuka Mothur Polambatti ,Nadupatti ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு