×

எஸ்ஆர்எம் பல்கலை பட்டமளிப்பு விழா சந்திரயான்-3 திட்ட இயக்குனருக்கு டாக்டர் பட்டம்: பாரிவேந்தர் வழங்கினார்

 

சென்னை: கட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கணேசன் அரங்கில் நேற்று‌ நடந்தது. இதில், உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவன வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகித்து, பாரத் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா மற்றும் சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். மேலும், 8513 மாணவ, மாணவியருக்கு பட்டம் மற்றும் பல்கலை தேர்வில் ரேங்க் பெற்ற 241 பேருக்கு பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து, எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவன துணை வேந்தர் செந்தமிழ்செல்வன் ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவன இணை வேந்தர் சத்தியநாராயணன் பேசுகையில், ‘இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ், உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இந்திய தேசிய மருத்துவ ஆணையகத்திற்கு, உலக மருத்துவ கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய மருத்துவர்கள் 10 ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றார். பாரத் ஆயுஷ் அமைச்சக செயலர் பத்ம வைத்தியா ராஜேஷ் கோட்சா பேசுகையில், ‘‘எஸ்ஆர்எம் பல்கலை கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதுடன், மருத்துவம் மற்றும் ஆயுஷ் மருத்துவ கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருவது பாராட்டுக்குரியது,’ என்றார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானியும், சந்திரயான்- 3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் பேசுகையில், ‘உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தை சந்திரனில் நிலை நிறுத்தி இந்திய விண்வெளி துறை சாதனை படைத்துள்ளது. நாம் வெற்றிபெற கடும் முயற்சி தேவை, தோல்வி பற்றி துவண்டு விடாமல் முயற்சி தொடரவேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகங்களின் தலைவர் சிவகுமார், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி, இணை துணைவேந்தர் ரவிக்குமார், பதிவாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post எஸ்ஆர்எம் பல்கலை பட்டமளிப்பு விழா சந்திரயான்-3 திட்ட இயக்குனருக்கு டாக்டர் பட்டம்: பாரிவேந்தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : SRM University ,Chandrayaan ,Parivendar ,Chennai ,SRM Institute of Science and Technology ,Kattangolathur, Ganesan ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய...