×

வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநிலை பாதிப்பு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவர். சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்த நிலையில் அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தாயுடன் வசித்து வரும் மாணவன், வீட்டில் தனியாக உள்ள நேரத்தில் இரவு, பகல் பாராமல் ெதாடர்ந்து வீடியோ கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக கல்லூரி விடுமுறை காரணமாக வீட்டிலேயே இருந்த மாணவன் லேப்டாப்பில் ஆன்லைன் கேமில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. ஏதேதோ சைகைளை செய்து கொண்டிருந்தாராம். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் உடனே அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவரது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனை அனுமதித்து உடல் நிலை பாதித்ததற்கான காரணம் குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். முன்னதாக தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆன்லைன் கேமில் மூழ்கியிருந்த மாணவனுக்கு திடீரென மனநிலை பாதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநிலை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Arakkonam, Ranipet district ,Chennai ,Dinakaran ,
× RELATED செவ்வாய்பேட்டை அருகே ரயில் எஞ்சின்...