×

தாமரை பாசத்தை மறக்காமல் தவிக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கட்சியை சேர்ந்த சர்ச்சை பேச்சாளர் ‘கிங்’ துரத்தியடிக்கப்பட்ட விஷயத்ைத சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வட மாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் மவுன்டன் யாத்திரையில் நடந்த பஞ்சாயத்தே இன்னும் முடியல. இந்த சூழலில் சர்ச்சை பேச்சாளர் ‘கிங்’ போகுமிடமெல்லாம் பிரச்னையாம். விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசியல் பேசி வம்பில் சிக்கினார். ஏற்கனவே, மாவட்ட தாமரை கட்சி வட்டாரத்தில் இவர் தலைமையில் ஒரு கோஷ்டி, மாவட்ட தலைமையின் கீழ் ஒரு கோஷ்டி, இலைக்கட்சியில் இருந்து தாவிய மாஜி எம்எல்ஏ தலைமையில் என ஏகப்பட்ட கோஷ்டிகள் அந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த சூழலில், சர்ச்சை பேச்சாளரின் பிறந்தநாளன்று மரியாதையில் துவங்கி வனத்தில் முடியும் ஊர்க்கோயிலில் சாமி தரிசனம் செய்யப் போனாராம். இதற்கான ஏற்பாட்டை ‘கிங்’கின் ஆதரவாளர்கள் செய்து இருந்தாங்களாம். ஆனால், எதிர்தரப்போ இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்

கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சர்ச்சை பேச்சாளர் காரை விட்டு இறங்கிய சில நிமிடத்திலேயே, மீண்டும் வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி திருப்பி அனுப்பிட்டாங்களாம். தாமரை கட்சியில இருக்கிற ஆட்களோடு எண்ணிக்கையை விட கோஷ்டி எண்ணிக்கை அதிகமா போயிரும் போல… பிரச்னைக்கு ‘கிங்’கான என்னையே பிரச்னை செய்து அனுப்பிட்டாங்களே, என்று புலம்பியபடியே சென்றாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சியில இருந்து ஒதுங்கி இருந்தவங்களுக்கு மீண்டும் இலை கட்சியில் பதவியா என்று யார் கொதித்து போயிருக்கிறார்கள்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி நிர்வாகிகள் மாற்றம் சமீபத்துல நடந்துச்சு. அதுல, 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர நியமிச்சாங்க. அதுல, கடந்த 10 வருஷமா கட்சியில காணாம போயிருந்த மீசைக்கார மாஜி மந்திரிக்கு, தீபம் ஏற்றும் மாவட்டத்துக்கான பதவி கொடுத்திருப்பது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்காம். தேனிக்காரரோட சேர்ந்து கிட்டு, சேலத்துக்காரருக்கு எதிரா தீபமலை ஊருல ஆட்களை திரட்டி கூட்டம் நடத்தினவருக்கா பதவினு கேள்வி எழுப்புறாங்க. தேனிக்காரருக்கு அதிகாரம் பறிபோனதும், அங்கிருந்து தாவி சேலத்துக்காரர்கிட்ட இனத்துபாசம் காட்டி ஒட்டிக்கிட்டாராம் மீசைக்காரரு.

ஆனாலும், கட்சி வேலை எதையும் பார்க்காம, தன்னோட பிஸ்னசை மட்டுமே கண்ணும் கருத்துமா பார்த்துட்டு இருந்தாராம். கட்சி நிகழ்ச்சிக்கு வந்தாலும், தான் மட்டும் தனியா வந்து ஓரமா ஒதுங்கிட்டு ேபானாரு. அவருக்குப்போய் மாவட்ட பதவியானு கொதிக்கிறாங்களாம் இலை கட்சிகாரர்கள். அதோட, இதுவரை மாவட்ட கட்சி ஆபீசா இருந்த இடம் என் சொந்த இடம்னு சொல்லி அதை பூட்டி வச்சிக்கிட்டாராம். கட்சிக்காரங்க ஆதரவும் இல்லாம, கட்சிக்குனு சொந்தமான எந்த இடமோ, அலுவலகமோ இல்லாம, தன்னோட வீட்டுலேயே முடங்கியிருக்கிறாராம் மீசைக்கார மாஜி. இப்படி இருக்குறப்ப எப்படி எம்பி தேர்தல சந்திக்க போறோம்னு கட்சி நிர்வாகிகள் புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்லியை பகைத்து கொள்ள முடியாமல் இலை உண்ணாவிரத போராட்டத்தில் விசுவாசத்தை காட்டிய மாஜி அமைச்சர் பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கர்நாடக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சேலத்துக்காரர் அணியை சேர்ந்த மாஜி அமைச்சர் மணியானவரும் கலந்து கொண்டாராம். தாமரை கூட்டணியில் இருந்து இலை கட்சி விலகினாலும் ஒன்றிய அரசுக்கு ஆதரவு தரும் வகையிலேயே பேச்சு தொடக்கம் முதல் முடியும் வரையிலுமே மணியானவர்
பேசினாராம். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர மறுத்துள்ளதால் தமிழ்நாட்டில் விவசாயிகள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை பற்றி கவலைப்படாமல் ஒன்றிய அரசு என்ன செய்கிறது என கேள்விகள் கேட்பது சரியில்லை. தாமரை கட்சியுடன் இலை கட்சி கூட்டணி முறித்தாலும் மணியானவர் இன்னும் தாமரைக்கு விசுவாசமாகவே இருக்கிறாராம். இது சேலம்காரருக்கு நன்றாகவே ெதரியுமாம். கடந்த 10 வருட ஆட்சியில் சேர்த்துள்ள சொத்துக்களை கடைசி வரையிலும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ெரட்யிடுக்கு பயந்தே தாமரை கட்சிக்கு தாவி விடுவார் போல தெரிகிறது என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடித்த கிண்டல் உண்ணாவிரத பந்தலில் பலமாக எதிரொலித்ததாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை பாசத்தை மறக்காமல் தவிக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : King ,Lotus Party ,Uncle ,Peter ,wiki ,Yananda ,
× RELATED உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்...