×

சிப்காட் நுழைவு வாயில் அருகே உள்ள சர்வீஸ் சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் நுழைவாயில் ஒட்டி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலை ஓரமாக பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, ஜார்க்கண்ட், ஹரியானா என பல்வேறு மாநிலங்களில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு வந்து செல்கின்றது. கனரக வாகனங்களான லாரி, கார் உள்ளிட்ட பல்வேறு விதமான வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மேற்கண்ட சர்வீஸ் சாலை வழியாக சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வருவதும் போதுமாக இருந்து வருகின்றன.

மேலும், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் சிப்காட் பகுதிக்கு 24 மணி நேரமும் பைக் மற்றும் சைக்கிள்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர். அப்போது, சிப்காட் நுழைவாயிலையொட்டி பாலாஜி எடை மேடை அருகே உள்ள பாதாள பள்ளத்தில் சுமார் இரண்டு மாதங்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பாதாள பள்ளத்தில் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தொழிலாளிகள் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் பள்ளத்தில் சிக்கி இதுவரை, 6 பேர் சிறு காயமடைந்துள்ளனர்.

இது சம்பந்தமாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இந்த பள்ளத்தை சீர் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, இது சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் வந்து ஆய்வு செய்து, உடனடியாக இந்த சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என சிப்காட் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சிப்காட் நுழைவு வாயில் அருகே உள்ள சர்வீஸ் சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chipcot ,Kummidipoondi ,Chipkot ,Chennai – ,Kolkata National Highway ,Dinakaran ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...