×

சித்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் வாக்குசாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் சித்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அவைத்தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிற்றரசு அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் முரளி, நிர்மல்குமார், ஜெயந்தி, ரமண அய்யா, ஐயப்பன், குமரேசன், விஜயன், ரமணி ரமணஐயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், செய்யூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் நமது கட்சியின் வாக்காளர்கள் பெயர்கள் சரியாக உள்ளதா விடுபட்டுள்ளதா என்பதை உன்னிப்பாக கவனித்து, விடுபட்டிருந்தால் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வாக்காளர்களையும், வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடியிலும் உதயசூரியன் சின்னத்திற்கு அதிக வாக்குகள் பெற வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என்றார். இதனைத் தொடர்ந்து சித்தாமூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கீழ் மருவத்தூரில் நடைபெற்றது. இதில், அவைத்தலைவர் வெங்கடகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஏழுமலை அனைவரும் வரவேற்றார்.

ஒன்றிய நிர்வாகிகள் பாஸ்கர், நாகப்பன், குமுதா மதுரை, செல்வம், வேதாச்சலம், ஆறுமுகம், ஜெய கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் இனிய அரசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டைகர் குணா, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் புருஷோத்தமன், மீனவரணி அமைப்பாளர் பாரத், துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post சித்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் வாக்குசாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chittamur East Union ,Sundar MLA ,Madhurandakam ,Chittamur East Union DMK ,Kanchipuram South District ,Chittamur… ,Dinakaran ,
× RELATED கணினி தமிழை கொண்டு வந்தவர் கலைஞர்,...