×

வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:

பாசிப்பருப்பு அரை கப்,
வாழைத்தண்டு (மீடியம் சைஸ்) 1,
வெங்காயம் (நறுக்கிக் கொள்ளவும்) 1,
பச்சை மிளகாய் 3,
காய்ச்சிய பால் கால் கப்,
சீரகம் அரை டீஸ்பூன்,
பூண்டு 2 பல்,
கறிவேப்பிலை சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து, அதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு நசுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

The post வாழைத்தண்டு கூட்டு appeared first on Dinakaran.

Tags :
× RELATED பொங்கல் சிறப்பு ரெசிபிகள்