×

பஞ்சாப் எல்லையில் சீன மாடல் ‘ட்ரோன்’, போதை பொருள் மீட்பு

அமிர்தசரஸ்: இந்திய – பாகிஸ்தான் எல்லை மாநில பகுதியில் சீன மாடல் ட்ரோன் மற்றும் போதைப் ெபாருள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் மாவட்டம் கல்சியன் குர்த் பகுதியின் நெல் வயலில், ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று கேட்பாரற்று கிடந்தது. தகவலறிந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று அந்த ட்ரோனை மீட்டனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில்,
‘இந்திய – பாகிஸ்தான் எல்லை வேலிக்கு முன்புள்ள வயற்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, குவாட்காப்டர் (சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்), 2.7 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் மீட்கப்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் போதைப் பொருட்களை கடத்தும் கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் அமிர்தசரஸில் உள்ள ராஜதல் கிராமத்திற்கு அருகிலுள்ள நெல் வயலில் ஒரு ட்ரோன் மற்றும் ஹெராயின் அடங்கிய பாட்டில் மீட்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

The post பஞ்சாப் எல்லையில் சீன மாடல் ‘ட்ரோன்’, போதை பொருள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Punjab border ,Amritsar ,India-Pakistan ,Dinakaraan ,
× RELATED ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட...