×

உடல் நலக்குறைவு காரணமாக காலமான தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் பிரபல தயாரிப்பாளருமான வி.ஏ. துரை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரின் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, பாபா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட படங்களை தயாரித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “உடல் நலக்குறைவால் உயிரிழந்த திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனது நடிப்பில் வெளியான கஜேந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post உடல் நலக்குறைவு காரணமாக காலமான தயாரிப்பாளர் வி.ஏ. துரை மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : VA ,Vijayakanth ,Durai ,CHENNAI ,Tamil Film Producers Association ,V.A. Durai ,V.A. ,
× RELATED துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி...