×

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!

மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

16,005 கொசு ஒழிப்பு புகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4,631 பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பரவல் அதிகரித்து வருவதால் மதுரை மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

The post மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி! appeared first on Dinakaran.

Tags : Madurai district ,Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை