×

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்துவரும் சூழலில் கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நேற்று நீர்வரத்து குறிப்பிட்ட அளவு இருந்த சூழலில் இன்று கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு மற்றும் சிக்க மங்களூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 5,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 11,800 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணைக்கு நீர்வரத்து 5,400 கனஅடியாக உள்ளது. இரண்டு அணைகளின் நீர்வரத்தின் அளவு 17,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை இரு யானைகளுக்கும் நீர்வரத்து 12,300 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 17,200 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இரு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தாலும் காவிரியில் திறந்துவிடும் நீரின் அளவை கர்நாடக அரசு குறைத்துள்ளது. நேற்று இரு அணைகளிலிருந்தும் வெளியற்றப்பட்ட நீரின் அளவு 3,100 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,K. ,R. ,Kabini ,K. R. S. ,Dinakaraan ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...