×

ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. ஏ பிரிவில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா வழக்கம்போல கோல் மழை பொழிந்தது. நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை வசப்படுத்தி இருந்த இந்திய அணியின் ஒருங்கிணைந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் எதிர்ப்பின்றி சரணடைந்தது. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆட்ட நேர முடிவில் 12-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மன்தீப் சிங் தலா 3 கோல் போட்டு ஹாட்ரிக் சாதனை படைத்தனர். அபிஷேக் 2, லலித் குமார், அமித் ரோகிதாஸ், நீலகண்ட சர்மா, குர்ஜன்த் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்த இந்தியா ஏ பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முன்னேறியது. லீக் சுற்றில் இந்தியா 58 கோல் அடித்துள்ள நிலையில், 5 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.

The post ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Hangzhou ,Asian Games ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்