×

‘பிதாமகன்’ தயாரிப்பாளர் துரை திடீர் மரணம்

சென்னை: ‘பிதாமகன் தயாரிப்பாளர் துரை மாரடைப்பால் திடீர் மரணடைந்தார். என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் ‘பாபா’ படத்திலும் எக்சிகியூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார். தமிழில் பல்வேறு படங்களை தயாரித்த வி.ஏ.துரை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். மனைவி, மகளை பிரிந்து வாழ்ந்த அவர், விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருந்தார். இருப்பினும் அவரது காலில் காயங்கள் ஆரவில்லை. அத்துடன் உடல் மெலிந்தும் அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வந்தார். சில நடிகர்கள் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

The post ‘பிதாமகன்’ தயாரிப்பாளர் துரை திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Durai ,Chennai ,
× RELATED கருத்து கணிப்புகள் பொய்யாகும்...