×

மதுரை அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகள் இறப்பு அதிகாரிகள் விசாரணை: டாக்டர்கள் திடீர் போராட்டம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதில் தங்களை பணி செய்ய விடாமல் தடுத்த மாநகராட்சி நகர்நல அலுவலரை சஸ்பெண்ட் செய்யக் கோரி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். மதுரை, வண்டியூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் தாய் இறந்தார். இதுபோல் மற்றொரு கர்ப்பிணியும் அங்கு இறந்தார்.

சிகிச்சையில் தாமதம் உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு டீன் நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை கலெக்டர் சங்கீதா விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார்.  இது தொடர்பாக மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக துறை உதவி அதிகாரி, சுகாதார துறை உதவி அதிகாரி, டிஆர்ஓ ஆகியோர் அடங்கிய குழுவினர் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு தீவிர சிகிச்சை வார்டிற்குள் நுழைந்து மருத்துவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது.

அவரை சஸ்பெண்ட் செய்ய கோரி தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். மதுரை அரசு மருத்துவமனை தரப்பில் கூறும்போது, ‘‘நகர்புற சுகாதார நிலையங்களில் இருந்து கடைசி நேரத்தில் கர்ப்பிணிகளை அழைத்து வருவதால் சில நேரம் உயிரிழப்பு ஏற்படுகிறது’’ என்றனர்.

The post மதுரை அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகள் இறப்பு அதிகாரிகள் விசாரணை: டாக்டர்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Government Hospital ,PTI ,Madurai Government Hospital ,Madurai Government ,Hospital ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...