×

ம.பி.யில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்

அசோக்நகர்: மத்திய பிரதேசம், உஜ்ஜைன் நகரில் சமீபத்தில் 12 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியது. அரை நிர்வாண கோலத்தில் ரத்தம் சொட்ட சொட்ட பல கிமீ வரை நடந்து சென்றும் அவருக்கு யாரும் உதவாதது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கிட்டத்தட்ட அதே போல் ஒரு சம்பவம் அம்மாநிலத்தில் நடந்துள்ளது. அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள வயல் வெளியில் இளம் பெண் சுய நினைவிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டிஎஸ்பி விவேக் சர்மா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு ஷதோராவில் சமுதாய மருத்துவமனையில் சேர்த்தனர். நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவரை வயல்வெளியில் போட்டு விட்டு சென்றனர். அதில் 3 பேர் தனக்கு அறிமுகமானவர்கள் என்று அந்த பெண் போலீசாரரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

The post ம.பி.யில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Y.L. Ashognagar ,Madhya Pradesh, Ujjain ,GP ,
× RELATED 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை...