×

சாதிவாரி கணக்கெடுப்பு தேவை; திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: பீகாரை போலவே தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை மக்கள் தொகைக்கு ஏற்ப 21% ஆக உயர்த்த வேண்டும். பீகார் அரசை போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு தேவை; திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,VC ,President ,Tamil Nadu government ,Bihar ,
× RELATED “அன்பின் பேராழம் காதல்” : எம்.பி. திருமாவளவன் காதலர் தின வாழ்த்து!!