×

கரடிவாவியில் மரக்கன்று நடும் விழா

 

பல்லடம், அக்.2: பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி அண்ணன்மார் கோவில் அருகில் உள்ள விஷ்னு வனத்தில் காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கம், எஸ்.எல்,என்.எம். மேல்நிலை பள்ளி தேசிய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கத்தின் பட்டயத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

செயலாளர் கார்த்திகேயன்,பொருளாளர் நவீன்,சுற்றுச்சூழல் பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மரக்கன்றுகள் நடும் பணியை கரடிவாவி எஸ்.எல்,என்.எம். மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அம்சவேணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் என்.எஸ்.எஸ். திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் முருகேசன், சங்கோதிபாளையம் மகிழ்வனம் தாவரவியல் பூங்கா செயலாளர் சோமு.என்ற பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி, தாவரவியல் வல்லுனர் உதயகுமார், தாய் மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கரடிவாவியில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : sapling ,Karadivavi ,Palladam ,Annanmar temple ,Vishnu ,Prashanpet Rock City ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...