×

கம்பத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம்

கம்பம், அக். 2: கம்பம் நகராட்சியில் உள்ள 21,23,24வது வார்டுகளில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தொடங்கி வைத்தார். வார்டு உறுப்பினர்கள் சுபத்ரா, தீபா, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் பேசுகையில், தமிழக அரசின் உன்னத திட்டமான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலம் கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் சுமார் 96 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர். குறிப்பாக நடக்க முடியாத மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகியோர் இந்த மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர், என்றார்.

The post கம்பத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kampham ,Gampam ,Dinakaran ,
× RELATED கம்பம் பகுதியில் அறுவடை முடிந்த...