×

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

 

பொன்னேரி, அக். 2: மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் பகுதியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 2வது வார்டு அரியன்வாயல் பகுதி உள்ளது. இங்கு, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம், மீஞ்சூர் பேரூராட்சி 2வது வார்டு உறுப்பினர் அபுபக்கர் தலைமையில் நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை நடந்தது. இந்த முகாமில் தலைமை மருத்துவர்கள் முஹம்மது அசீன், மகேந்தரன் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராய் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் கலந்து கொண்டு, முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது, மேலும், 20க்கும் மேற்பட்ட மருத்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், சித்தா, யுனானி கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதகளை, காசநோய் எக்ஸ்ரே, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை, இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் குழந்தைகள் நலன், மக்களை தேடி மருத்தவம், பிசியோ தரபி என பல்வேறு துறைகளின் மூலம் மருத்தவர்கள் பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

அங்கன்வாடி மூலம் அனைவருக்கும் ஊத்த சத்துமாவு, கஞ்சி, கொழுக்கட்டையும் வழங்கப்பட்டது. பேரூராட்சி மூலம் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றது. இதில், கதிர்வேல், சைய்யத் அலி, அப்துல் சமத், சாதிக் பாஷா, சாகுல், அப்துல்லா மற்றும் மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க நிர்வாகிகள் உட்பட பலரும் மருத்துவ துறை ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று, இலவசமாக மருந்து மாத்திரைகளும் பெற்றுக் கொண்டனர்.

The post கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Varumun kapom ,Ponneri ,Arianwayal ,Meenjur Municipality ,Kappom ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்