×

செங்கை, காஞ்சி – சென்னை கடற்கரை இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

செங்கல்பட்டு, அக்.2: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை இடையே, எழும்பூர், தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதால் இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது, என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணி நேர பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் எண் (40754), திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் எண் (40854) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மற்றும் மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 மணிக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே காலை 10.45, 10.55, 11.5, 11.25, 11.35 மற்றும் மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, 3 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50 மற்றும் மதியம் 12.50, 1.45, 2.15 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மற்றும் மதியம் 12 மற்றும் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் ஞாயிறுக் கிழமை அட்டவணைப்படி சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

The post செங்கை, காஞ்சி – சென்னை கடற்கரை இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Senkai, Kanchi ,Chennai coast ,Southern Railway ,Chengalpattu ,Kanchipuram ,Egmore ,Tambaram ,Kodambakkam ,Senkai ,Kanchi ,Chennai ,
× RELATED ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை...