×

தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் மின் வாரிய விஜிலென்ஸ் டிஜிபி பிரஜ்கிஷோர் ரவி விருப்ப ஓய்வு

சென்னை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. சுதந்திர போராட்ட வீரர்கள் குடும்பத்தை சேர்ந்த இவர், யூபிஎஸ்சி தேர்வில் கடந்த 1989ம் ஆண்டு தமிழக கேட்டரில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உதவி எஸ்பியாக தனது பணியை தொடங்கிய அவர், 34 ஆண்டுகள் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தில் ஐ.நா சபையில் போஸ்னியா மற்றும் ஹெர்சோகோவினாவுக்குச் சேவை ஆற்றியுள்ளார். மேலும், ஐ.நா சபையின் அமைதிச் சந்திப்பு பதக்கத்தை 2 முறை பிரஜ் கிஷோர் ரவி பெற்றுள்ளார். ஒன்றிய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலும் பணியாற்றினர்.

தமிழ்நாடு காவல்துறையில் தீயணைப்புத்துறை டிஜிபியாகவும் பணியாற்றினர். தற்போது மின்வாரிய விஜிலென்ஸ் இயக்குநராக பணியாற்றி வந்தார். மூத்த டிஜிபியான பிரஜ் கிஷோர் ரவி, தமிழ்நாடு டிஜிபி பதவிக்கான பட்டியலில் 2வது இடத்தில் இருந்தார். இவரது பணிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடியவுள்ள நிலையில், டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி தனது விருப்ப ஓய்வுக்கான கடிதத்தை தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதாவிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விருப்ப ஓய்வு பெற்ற டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, தேசிய கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே இவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

The post தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் மின் வாரிய விஜிலென்ஸ் டிஜிபி பிரஜ்கிஷோர் ரவி விருப்ப ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Power Board Vigilance ,DGP ,Brajkishore Ravi ,CHENNAI ,Braj Kishore Ravi ,Bihar ,UPSC ,Prajkishore Ravi ,
× RELATED மாட்டுவண்டி பந்தயம்: விதிமுறைகளை...