×

ஆந்திராவில் விநாயகர் ஊர்வலத்தில் தீ வைத்து நடனமாடிய போது தீ விபத்து: 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்!

ஆந்திரா: ஆந்திராவில் விநாயகர் ஊர்வலத்தில் காந்தார பாடலுக்கு சுற்றிலும் தீ வைத்து நடனமாடிய போது தீ விபத்து ஏற்பட்டபோது 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு மண்டலம் எரகுண்ட்லா பகுதியில் நேற்று இரவு விநாயகர் விசர்ஜனம் செய்ய ஊர்வலமாக விநயாகர் சிலை கொண்டு செல்லப்பட்டது.

அப்போது ஆடல் பாடல்களுடன் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாட்டுப்புற கலைஞர்கள் காந்தாரா படத்தில் வருவது போன்று வராக ரூபம் படாலுக்கு ஏற்ப இரண்டு கலைஞர்கள் படத்தில் வருவது போன்று வராக ரூபம் வேடம் அணிந்து சுற்றிலும் தீ வைத்து நடனம் ஆட முடிவு செய்தனர்.

ஒருவர் கலைஞர்களை சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில், அங்கு வேடிக்கை பார்க்க வந்த 6 சிறுவர்களுடன் நடனம் ஆட இருந்த கலைஞர்கள் மீது தீ பிடித்து கொண்டது. உடனடியாக காயம் அடைந்தவர்களை ஜம்மலமடுகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. விநாயகர் ஊர்வல கொண்டாட்டத்தில் அலட்சியத்தால் தீ விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post ஆந்திராவில் விநாயகர் ஊர்வலத்தில் தீ வைத்து நடனமாடிய போது தீ விபத்து: 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Vinayagar ,Vinayakar ,
× RELATED காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்...