×

கே.பி.முனுசாமி குறித்த வீடியோ வெளியாகும்: ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி மிரட்டல்

சென்னை: ஓபிஎஸ் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் விரைவில் கே.பி.முனுசாமி குறித்த வீடியோ வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்துள்ளார். அதிமுக, ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சம்பந்தமாக ஆடியோ ஒன்றை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஆடியோவை வெளியிடவில்லை.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தொடர்ந்து கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ்., குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவர் ஓபி.எஸ்., குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும். ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியிட்டு பொன்னையன் தற்போது அவர் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார். அதேநிலை விரைவில் முனுசாமிக்கும் வரலாம். எனவே அவர் ஓ.பி.எஸ்., குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே கே.பி.முனுசாமி ஓபிஎஸ் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் அவரது வீடியோ விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கே.பி.முனுசாமி குறித்த வீடியோ வெளியாகும்: ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : KP ,Munusamy ,OPS ,Krishnamurthy ,Chennai ,KP Munusamy ,Kolathur ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம்