×

சரத்குமார் வலியுறுத்தல் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு தேவை

சென்னை: சமக தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர்கள் சங்க தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட 50 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தது வருத்தமளிக்கிறது. ஊதிய முரண்பாட்டால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதித்துள்ளனர்.எனவே, அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை கைவிடச் செய்து, நிரந்தர தீர்வு காண கேட்டுக் கொள்கிறேன்.

The post சரத்குமார் வலியுறுத்தல் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு தேவை appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,CHENNAI ,Samaga ,Anbazhagan ,Nungambakkam, Chennai ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...