×

பெசன்ட்நகர் மின்மயானத்தில் 30 குண்டு முழங்க காவல் துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்

சென்னை: பசுமை புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98), வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 28ம் தேதி காலை 11.20 மணி அளவில் காலமானார். உடல் தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விஞ்ஞானிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து 12 மணியளவில் பெசன்ட்நகர் மின்மயானத்தில் 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி அவரது உடலுக்கு மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

The post பெசன்ட்நகர் மின்மயானத்தில் 30 குண்டு முழங்க காவல் துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் appeared first on Dinakaran.

Tags : MS Swaminathan ,Besantnagar Cemetery ,Chennai ,
× RELATED எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 4 பேருக்கு...