×

தடுப்பூசி போட்ட 2வது நாளில் ஒன்றரை மாத குழந்தை சாவு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேதோட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி-மணிமேகலை தம்பதிக்கு 2 வயதில் பெண் குழுந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் மணிமேகலைக்கு, கடந்த 46 நாட்களுக்கு முன் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2 நாட்களுக்கு முன், கிராம சுகாதார மையத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர். காய்ச்சல் வரவே பெற்றோர், நேற்று முன்தினம் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த கலெக்டர் சரயு, இறந்தது 2வது பெண் குழந்தை என்பதால், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

The post தடுப்பூசி போட்ட 2வது நாளில் ஒன்றரை மாத குழந்தை சாவு appeared first on Dinakaran.

Tags : Pochampalli ,Periyasami-Manimegala ,Paleythott ,Pochampalli district, Krishnagiri district, Pochampalli ,Dinakaran ,
× RELATED விபத்தில் இறந்த தந்தையின் இன்சூரன்ஸ்...