×

ஜம்முவில் என்ஐஏ சோதனை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள் தாங்க்ரி கிராமத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் நிசார் அகமத் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் தாலுக்காவிற்குட்பட்ட குர்சாய் கிராமம் உட்பட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக கருதப்படுபவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

The post ஜம்முவில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : NIA test ,Jammu ,Lashkar ,Thangri ,Rajori district ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த 4 பேரின் சொத்துக்கள் முடக்கம்