பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, ருத்ஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா நேற்று துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், ஸ்குவாஷ், தடகளம் ஆகியவற்றில் பதக்கம் வென்றுள்ளது. அதேநேரத்தில் சில முக்கியப் போட்டிகளில் இறுதி, காலிறுதி மற்றும் அரையிறுதிக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா, ருத்ஜா போஸ்லே ஜோடி சீன தைபா அணியை எதிர்க் கொண்டனர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், டை பிரேக்கரில் 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் இந்திய அணி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இந்தியா பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இந்தியா 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என 35 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
The post ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் மேலும் ஒரு தங்கம்.. 35 பதக்கங்களுடன் 4-ம் இடத்தில் இந்தியா..!! appeared first on Dinakaran.