×

எங்களை பற்றி பேச எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது…பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு நம்பிக்கை துரோகி : அதிமுக பதிலடி

சென்னை : அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக்க பாஜக கூறியதாக கருப்பணன் கூறியதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அண்ணாமலையை நிறுத்த வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதால் தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ன் தெரிவித்து இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த கே.பி.முனுசாமி, முதலமைச்சர் பதவிக்கு அண்ணாமலையை முன்னிறுத்த வேண்டும் என பாஜக கேட்கவில்லை என விளக்கம் அளித்தார். மேலும் பேசிய முனுசாமி, அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறுவது அபத்தமானது சமூக வலைதளங்களில் வந்த தவறான தகவல்களை கே.சி.கருப்பணன் பேசியுள்ளார். ஏற்கனவே முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

2016 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவோம்,” என்றார். தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, பழனிசாமி நம்பகத்தன்மை இல்லாதவர் எனக்கூறிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தமிழ்நாடு அரசியலில் நம்பகத்தன்மை இல்லாத ஒருவர் என்றால் அது பண்ருட்டி ராமச்சந்திரன் தான்.தனக்கு வாய்ப்பு அளிக்க எந்த தலைவருக்கும் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்தது இல்லை.நம்பிக்கை துரோகி என்பதற்கு உதாரணமாக காட்டக் கூடியவராக பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளார்.அதிமுகவின் தவறான பாதையை காட்டியதால் தான் செயற்குழுவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டார்.நம்பகத்தன்மை இல்லாத, நம்பிக்கை துரோகத்திற்கு பெயர் போனவர் அவர்,”என்றார்.

இதனிடையே பாஜக இல்லாவிட்டால் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல் சிதறியிருக்கும் எனக்கூறிய எச்.ராஜாவுக்கும் முனுசாமி தனது கண்டனங்களை பதிவு செய்தார். எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அவர், “2026ல் ஆட்சிக்கு வரவேண்டியதுதான் எங்கள் இலக்கு, இதில் எங்கிருந்து வந்தார்கள் பாஜக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இவர்களை எந்த அளவிற்கு ஏற்றுகொண்டுள்ளனர் என்று தெரிய வரும். நாங்கள் விரல் காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான் எச்.ராஜா, அவருக்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது”, எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

The post எங்களை பற்றி பேச எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது…பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு நம்பிக்கை துரோகி : அதிமுக பதிலடி appeared first on Dinakaran.

Tags : H Raja ,Panrutty Ramachandran ,AIADMK ,Chennai ,Deputy General Secretary ,KP Munusamy ,Karuppanan ,BJP ,Annamalai ,H.Raja ,
× RELATED பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக...