×

நாம் தமிழர் கட்சி நிர்வாகி நீக்கம்

 

முத்துப்பேட்டை, செப். 30: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (எ) உமர் முகமது(43). இவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா. வக்கீலான உமர் முகமது, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளராக இருந்து வந்தார். உமர் முகமது மற்றும் அவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 11ம் தேதி ஏற்பட்ட தகராறில் மனைவியை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி, வீட்டுக்குள் அடைத்து வைத்தார். இதுகுறித்து முத்துப்பேட்டைபோலீசில் ஹாஜா ஜெய்னுல் அரபா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து உமர் முகமதுவை கைது செய்தனர். இந்தநிலையில் கட்சி பொறுப்பில் இருந்தும், கட்சியிலிருந்தும் உமர் முகமதுவை நீக்கம் செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

The post நாம் தமிழர் கட்சி நிர்வாகி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamilar Party ,Muthuppet ,Rajkumar (A) Umar Mohammad ,Muthuppet, Azad Nagar, Tiruvarur District ,Naam Tamilar Party ,Dinakaran ,
× RELATED சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது :...