×

மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் ₹22 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள், தரை மேம்பாலம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

மதுராந்தகம், செப். 30: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக ₹22.08 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் தரை மேம்பாலங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில், ஊரக வளர்ச்சி துறை மூலமாக ₹22.08 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள், மேம்பாலங்கள் திறப்பு விழா, புதிய மேம்பாலம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், மதுராந்தகம் ஒன்றியம் அரையப்பாக்கம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலமாக ₹11.97 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் எம்பி செல்வம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

இதனை தொடர்ந்து கிணார் ஊராட்சி கே.கே.புதூர் கிராமத்தில் உள்ள வீராணம் சாலை பகுதி கிளியாற்றில் ₹16.67 கோடி மதிப்பில், புதிய மேம்பாலம் கட்டும் பணியின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும், முன்னுத்திக்குப்பம் ஊராட்சியில் ₹1.99 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம், சிறுநல்லூர் ஊராட்சி முதுகரை கிராமத்தில் ₹11.97 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் மொறப்பாக்கம் ஊராட்சி கருணாகரவிளக்கம் கிராமத்தில், ₹11.97லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடமும், கீழ் அத்திவாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாக ₹15.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பால் கொள்முதல் நிலையம், களத்தூர் ஊராட்சியில் ₹23.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையக் கட்டிடம், மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் சமையல் கூடம் ஆகியவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன், கீதா கார்த்திகேயன், துணைப் பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் சத்திய சாய், சிவக்குமார், தம்பு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன், மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், பேரூர் செயலாளர் எழிலரசன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், அவைத் தலைவர் சசிகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் ராஜா ராமகிருஷ்ணன், மாலதி, வசந்தா கோகுலக்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி அரசு, தெய்வசிகாமணி, மோகன், ஜோதிலிங்கம், திலகம் செல்லப்பன், பச்சையம்மாள் கோவிந்தராஜன், பாலாஜி, சாவித்திரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் பொன்மலர் சிவகுமார், பார்த்தசாரதி, சிவக்குமார், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் ₹22 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள், தரை மேம்பாலம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Achirpakkam Unions ,Minister ,Thamo Anparasan ,Rural Development Department ,Madurandakam ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்