×

தரம் மிகுந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு மத்திய தரச்சான்று குழு அறிவித்தது தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்

சேத்துப்பட்டு, செப். 30: தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் மிகுந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய தரச்சான்று குழு அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மத்திய தரச்சான்று குழு கடந்த மாதம் ஆய்வு செய்தனர். அதில் மத்திய சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் சவிதா தலைமையில் வந்த குழுவினர் தேவிகாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டனர்.இதில் ஆரம்ப சுகாதார நிலையம், கட்டிடம், மருத்துவ சேவை, பொதுமக்களின் அணுகுமுறை என பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று மத்திய அரசு குழுவினர் திருவண்ணாமலை தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் மிகுந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்யாறு சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜன் மற்றும் மருந்தாளுனர் மற்றும் செவிலியர், மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மருத்துவ அலுவலர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜன் ஆகியோர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

The post தரம் மிகுந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு மத்திய தரச்சான்று குழு அறிவித்தது தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் appeared first on Dinakaran.

Tags : Devigapuram Primary Health Center ,Central Certification Board ,Primary Health ,Primary ,Central Certification Committee ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுண் கதிர் பரிசோதனை கூட்டம் திறப்பு