×

குலசேகரன்பட்டினம் பகுதியில் இன்று மின்தடை

உடன்குடி,செப்.30: திருச்செந்தூர் மின்சார வாரிய விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட கல்லாமொழி உபமின் நிலையத்தில் இன்று (30ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9மணி முதல் மாலை 4மணி வரை ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது என கூறியுள்ளார்.

The post குலசேகரன்பட்டினம் பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpattinam ,Abengudi ,Thiruchendur Electricity Board ,Vijaya Sangarapandian ,Kallamozhi ,Tiruchendur ,Dinakaran ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது