×

வைகை ஆற்றில் வாலிபர் கொலை ‘குடும்பத்தினர் குறித்து பேசியதால் கொன்றேன்’ கைதான நண்பர் வாக்குமூலம்

மதுரை, செப். 30: மதுரை, ஆரப்பாளையம், டிடிசாலையில் வைகை ஆற்றின் உள்ளே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், கடந்த 25ம் தேதி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது, உடலை மீட்ட கரிமேடு போலீசார், பிரதே பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்ட வாலிபர் விளாங்குடியைச் சேர்ந்த முத்துராமன் (27) எனவும், போட்டோகிராபராக வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அவரது, நண்பரான தத்தனேரி, பாரதி நகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி இளங்கோவன் (28) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அவர் மது போதையில் முத்துராமனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார் கூறுகையில், ‘‘கடந்த 24ம் தேதி இரவு, வைகை ஆற்றில் மது அருந்தியபோது இளங்கோவனின் குடும்பம் குறித்து, முத்துராமன் தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். அதில், ஆத்திரமடைந்த இளங்கோவன், பீர் பாட்டிலை உடைத்து, முத்துராமனை குத்தி உள்ளார். அவர், மயங்கிய பின் கீழே கிடந்த கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி உள்ளார்’’ என்றனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வைகை ஆற்றில் வாலிபர் கொலை ‘குடும்பத்தினர் குறித்து பேசியதால் கொன்றேன்’ கைதான நண்பர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Vaigai river ,Madurai ,Titsalai, Arapalayam, Madurai ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...