×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்திற்கு குண்டு மிரட்டல்: அதிகாரிகள் சோதனை

சென்னை: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கடந்த ஓராண்டாக மும்பை – சென்னை, மும்பை – பெங்களூர், சென்னை – பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளை இயக்கி வருகிறது. நேற்று ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன டிவிட்டர் பதிவு ஒன்றில், ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் இன்று (நேற்று) நடு வானில் பறந்து கொண்டிருக்கும்போது வெடித்து சிதறும், என்று ஒரு மிரட்டல் பதிவு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று இரவு 9 மணிக்கு மும்பை புறப்பட்டு செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்ய இருக்கும் அனைத்து பயணிகளையும், அவர்கள் உடமைகளையும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.

இந்த விமானம் இரவு 8 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு செல்லும்.இந்த டிவிட்டர் பதிவு, அந்த விமான நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில் தான் வந்துள்ளது. அந்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது இந்த மிரட்டல் பதிவை போட்டிருக்கலாம் அல்லது இது வெறும் புரளியாக தான் இருக்கும் என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அந்த டிவிட்டர் பதிவில் எந்த விமானம், எந்த விமான நிலையத்தில் இருந்து எங்கு செல்லும் விமானம், எந்த நேரம் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இது அதிகாரிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்திற்கு குண்டு மிரட்டல்: அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Akasha Airlines ,Chennai airport ,Chennai ,Mumbai ,Chennai, Mumbai ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலையால் தரையிறங்க...