×

தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடித்து 58 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைப்படை தாக்குதலில் 58 பேர் பலியானார்கள். மேலும் 50 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் மஸ்தங் மாவட்டத்தில் முகமது நபிகள் பிறந்த நாளையொட்டி நேற்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஏராளமான இஸ்லாமியர்கள் மதினா மசூதி அருகே திரண்டு இருந்தனர். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த மர்மநபர் டிஎஸ்பியின் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்துக்கு அருகே உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியுள்ளான். சக்திவாய்ந்த குண்டு வெடித்து சிதறியதில் அங்கு இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.

இந்த குண்டு வெடிப்பில் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடந்து முடிந்த ஒரு சில மணி நேரத்தில்,கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஹங்கு நகரில் தபா காவல்நிலையத்துக்குள் 5 தீவிரவாதிகள் நுழைந்தனர். உடனடியாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். மேலும் 3 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். ஒரு தீவிரவாதி மசூதி அருகே தன்னிடம் இருந்த குண்டை வெடிக்க செய்தான். இதில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

The post தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடித்து 58 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Suicide attack ,Pakistan ,Karachi ,Suicide ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...