×

5 ஆண்டு வைப்புதொகைக்கான வட்டி விகிதம் 6.7 % உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தாண்டு தொடர் வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் டிசம்பர் காலாண்டில் 6.5 % ல் இருந்து 6.7 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுசேமிப்பு திட்டத்துக்கான வட்டி வகிதம் 4 % ஆகவும், ஓராண்டு கால வைப்பு தொகைக்கு 6.9 % ஆகவும் உள்ளன. இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு கால வைப்பு தொகையின் வட்டி விகிதம் முறையே 7 % மற்றும் 7.5 % உள்ளது.மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டத்துக்கு 8.2 % கிடைக்கும். மாதாந்திர வருவாய் திட்டத்தில் வட்டி விகிதம் 7.4 % , பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) திட்டத்தில் 7.1 % ஆகவும் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

The post 5 ஆண்டு வைப்புதொகைக்கான வட்டி விகிதம் 6.7 % உயர்வு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Finance Ministry ,
× RELATED மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள்...