×

சீமான் கூட்டத்தில் கற்கள் வீச்சு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடைக்கு வருவதற்கு முன், மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் பேசிக்கொண்டு இருந்தார். மேடையை நோக்கி அருகேயுள்ள கோரையாறு கரை பகுதியிலிருந்து தொடர்ந்து கற்கள் வீசப்பட்டது. அந்த கற்கள், மேடைக்கு முன்பு நின்றிருந்த கட்சியினர் கூட்டத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சீமான் பேசியபோது, ‘கூட்டத்தில் யாரோ ஒருவர் கற்களை வீசி எறிந்துள்ளனர். இதற்கு நாங்கள் அஞ்ச போவதில்லை. பல இடங்களில் பார்த்து விட்டோம். எங்களுக்கு இது ஒன்றும் புதியதல்ல. இன்னும் நிறைய கற்களை வீசுங்கள், அப்போதுதான் அந்த கற்களை சேகரித்து உங்களுக்கு சமாதி கட்ட முடியும். இன்னும் நிறைய வீசுங்கள் நாங்கள் கோட்டையை கட்டி இந்த நாட்டை ஆளுகிறோம்’ என்றார்.

The post சீமான் கூட்டத்தில் கற்கள் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Stone ,Muthuppet ,Naam Tamilar Party ,Muthupet, Tiruvarur district ,Chief coordinator ,Seeman ,Dinakaran ,
× RELATED நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில...