×

வாகன தணிக்கையில் 3 வாகனங்கள் பறிமுதல்

மல்லசமுத்திரம், செப்.29: சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான காளிப்பட்டி அண்ணா சிலை அருகில், திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா தலைமையிலான அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் வாகனத்தில் அதிவேகமாக சென்றது, சீட் பெல்ட் அணியாமல் சென்றது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு வாகன விதிமீறல்களின் கீழ், வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. முறையான எப்.சி., இல்லாத சரக்கு வாகனம், பொக்லைன், தண்ணீர் வாகனம் என 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

The post வாகன தணிக்கையில் 3 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Salem-Namakkal district ,Kalipatti Anna ,Tiruchengode ,Dinakaran ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்